Wed. May 7th, 2025

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் ஈழத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பல தமிழ்நாட்டிலேயே பிறந்தவையாகும். இந்தப் பிள்ளைகள் முகாம்களின் அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றன.

மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு எழுத அவர்கள் விரும்பிய போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் குறிப்பிட்ட அளவுக்கு இடம் அவர்களுக்கு ஒதுக்கி நீட் தேர்வு எழுதவும் அவர்களை அனுமதிக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
1982-83 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் இனப்படுகொலை கோரத்தாண்டவம் ஆடிய போது சிங்கள ராணுவம், புத்த மத வெறியர்கள் கூட்டு சேர்ந்து அப்பாவி தமிழர்களை தேடி தேடி வேட்டையாடி னார்கள்.. உலக வரலாற்றில் கோரமான இனப்படுகொலை யாக பதிந்து போன அந்த ஆண்டுகளில் பல லட்சம் ஈழத்தமிழர்கள், தங்கள் சொத்துகளை எல்லாம் இழந்து விட்டு அகதிகளாக தமிழ்நாடு வந்து தஞ்சம் அடைந்தனர்.. தொப்புள் கொடி உறவான தமிழகத்தில் அடைக்கலம் கிடைத்தாலும் கூட கடந்த 40 ஆண்டுகளில் அகதிகளுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலைதான் இன்னும் நிலவி வருகிறது..

அவர்களின் வாழ்விடங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை..

பாதுகாப்பான இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துவங்க கடனுதவி உள்ளிட்டவற்றை பெற ஒவ்வொரு ஆட்சிக் கலத்திலும் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.. தமிழ் தேசியத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்..

அனைவருக்குமான வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு திட்டங்களை தீட்டி வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியிலாவது ஈழத் தமிழர்களின் நீண்ட கால சோகத்திற்கு விடிவு ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது…