தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்.
மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்து தடை தொடரும் ( புதுச்சேரி நீங்கலாக).
திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும்.
இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.
உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.
50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
DIPR-P.R.No_.421-Honble-CM-Lockdown-Press-Release-Date-10.07.2021