எதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்…
————————————
சீனா இந்துமகா சமுத்திரத்தில் தலை காட்டுவதால் என்ன இருக்கின்றது என்று பலர் கிண்டலடிக்கின்றனர்…
நண்பர்களே கவனியுங்கள்,
ஹம்பன் தோட்டாவை இலங்கை 99 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்திருப்பது சரிதான். சீனா இந்து மகா சமுத்திரத்தில் குடி கொள்ள பட்டு வழி சாலையை (silk way)அமைத்துக் கொண்டு வருகிறது. அவை ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளுக்கு தனது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக அந்த வேலையை செய்கிறது. சீனா அமைதியாக இருக்கின்றேன் நட்புறவு பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டே நம் மீது போர் தொடுத்ததையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையா?
இந்து மகா சமுத்திரம் சீனா வந்தால் நமக்கு என்ன அக்கறை நாம் ஏன் அதைப் பேச வேண்டும் என்று பல நண்பர்கள் படித்த புத்திசாலியான நண்பர்கள் அபத்தமாக பேசிக் கொண்டியுள்ளனர். கொஞ்சம் புரிந்து பேசுங்கள்;சீனா வடகிழக்கே,லடாக் பகுதியில் வந்தால் அந்த கோபத்தை சீனா தெற்கு காட்டமாட்டார்கள் என்று என்ன ஒரு உத்தரவாதம் இருக்கிறது என சற்று சிந்தியுங்கள்.
1)கூடங்குளம் அணுமின் நிலையம் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் இருக்கின்றது.
2)ஐஎன்எஸ் கட்ட பொம்மன் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி அருகே 300 ஏக்கர் பரப்பில் உள்ளன.
3)மகேந்திரகிரி இஸ்ரோ வளாகம் திருநெல்வேலி மாவட்டத்தில். அமைந்துள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான மூலப்பொருட்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.
4)குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளமும் வரப்போகின்றது. அதுவும் தூத்துக்குடி மாவட்டம் கடற்கரையோரம் குலசேகரபட்டினத்தில் அமைய உள்ளது.
5) தூத்துக்குடி துறைமுகம்.
6) மனப்பாடு, முட்டம், குளச்சல், தேங்காய் பட்டணம் மீன் பிடி துறைமுகங்கள்.
7)குமரி மாவட்டம் மணவாள குறிச்சியில் அரிய மணல் நிறுவனமும் இருக்கின்றது. அதில் கதிரியக்க தாதுமணலை பிரித்தெடுக்கும் சென்சிட்டிவான ஆலை குமரி மாவட்டத்தில் உள்ளது.
மேலும் கேரளாவில் கொச்சி துறைமுகம், தும்பா ராக்கெட் என பல …..
இந்தியாவின் கடல் வழி போக்குவரத்து தென் மாநிலங்களில் தான் நடக்கின்றது.
இப்படியான விஷயங்களை அறிந்துகொண்டு இப்படியான சிக்கல்கள் எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு முன்னேற்பாடாக சீனாவை அதன் ஆதிக்கத்தை இந்து மகா சமுத்திரத்தில் கூடாது என்று சொல்வதுதான் காலத்தின் கட்டாயம்.
இதற்கு ஏன் கிண்டல் அடிக்க வேண்டும் நான் எழுதுவதை. அப்படி என்றால் இவர்கள் எல்லாம் அறிவுஜீவிகளா?இது காரண காரியங்கள் இல்லையா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் படித்தவர்களாக இருக்கலாம். நீங்கள் சொல்லும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் சொல்வதை சொல்லிக்கொண்டே இருப்பேன் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்களது விருப்பம்.
நாட்டின் பாதுகாப்பிற்காக தென்மண்டலத்தில் எதிர்காலத்தில் சிக்கல் வரக்கூடாது என்ற நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் நிலையம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கூடங்குளம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், குமரி மாவட்டத்தில். தாதுமணல் நிலையம் பாதுகாப்பாக இயங்க வேண்டும், ஐ.என்.எஸ் கட்டபொம்மன் என்ற இந்திய கடற்படை தளம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதேபோல மகேந்திர இஸ்ரோ வளாகமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மேலும் கொச்சி துறைமுகம், திருவனந்தபுரத்தில் இருக்கின்ற தும்பா, இதெல்லாம் கவனிக்கப்பட வேண்டாமா, இதில் என்ன தவறு, இதுக்கு என்ன கிண்டலடிக்க பட வேண்டியது இருக்கு, என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்!முட்டாள் ஜென்மங்களே!!. இந்த நிலையில் சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு பிரச்சினைகளும் இருக்கின்றது அதையும் நாம் கவனிக்கப்பட வேண்டும்.
சீன போர்க்கப்பல்கள் தொடர்ந்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதையெல்லாம் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை புரியாமல் பேசுகின்ற மனிதர்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் பொது வெளியில் இதை வைக்கின்றேன். கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவர்களது விருப்பம். எனது அனுபவத்தில் எழுதுகின்றேன். எனது தகுதியும் தரமும் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருந்துள்ளேன். நான் நாட்டிற்காக உழைக்கின்றேன். எனக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்
06.07.2021.