Mon. Nov 25th, 2024

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு நடப்பு கல்வியாண்டில் முதல் சிறப்பு மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் போன்றவற்றால் பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போகும் சூழலைத் தவிர்க்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மற்றும் 12-ம் வகுப்பில் பாடத்திட்டத்தை இரண்டாக பிரித்து முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவம் என தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் அகமதிப்பீட்டு தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.