Sun. Nov 24th, 2024

கோவை, நீலகிரி,ஈரோடு, சேலம், கரூர், நாகை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் டீக்கடைகள், வீட்டு உபயோக மின்சார கடைகள், போட்டோ, வீடியோ ஜெராக்ஸ் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம்.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி.

23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் ஜவுளிகடைகள் திறக்க அனுமதி.

4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கும், வணிக வளாகங்களுக்கும் , உணவகங்களில் பார்சல்களுக்கும் அனுமதி.

11 மாவட்டங்களில் தியேட்டர்கள் வட்டாட்சியர் அனுமதி பெற்று பராமரிப்பு பணி செய்யலாம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய 4 மாவட்டங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க நிறுவனங்களுக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

23 மாவட்டங்களில் திருமண இ பதிவு தேவையில்லை.

23 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

27 மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.

27 மாவட்டங்களில் கடற்கரையில் நடைபயிற்சிக்கு அனுமதி.

11 மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் பிற மாவட்ட திருமணத்திற்கு செல்ல இ பதிவு பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம் இதோ….

draft-press-release-25.6.2021-revised