பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் பிரபலங்கள் குறித்து ஆபாசமாக விமர்சனம் செய்து பதிவிட்ட அதிமுக மற்றும் பாஜக கிஷோர் கே.சுவாமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக நடிகை ரோகிணி, பெண் பத்திரிகையாளர்கள் அளித்த புகார் மீது உடனடியாக சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கிஷோர் கே.சுவாமியையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளதையடுத்து, கிஷோர் கே.சுவாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.