Mon. Nov 25th, 2024

பாஜக.வுக்கு எதிராக 3 வது அணியை உருவாக்குவது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாரின் டெல்லி இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், ராஷ்டிரிய லோக் தள், சமாஜ்வாடி, தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொணடனர். சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே உட்பட தேசிவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ராஷ்டிரிய மாஞ்ச் என்று இந்த அமைப்புக்கு யெர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. அக்கட்சிக்கு அழைப்பு விடுவிக்கவில்லை எனறு கூறப்பட்ட நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாதான் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக.வுக்கு எதிரான ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைந்து, பொதுமக்களை பாதிக்கக் கூடிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும், தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கொரோனோ தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது, ஜனநாயக அமைப்புகள் மீதான மத்திய பாஜக அரசின் தாக்குதல், வேலையின்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், மக்கள் பிரச்னைகளில் ஒருங்கிணைந்த போராடுவது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித்தலைவர்களை தவிர, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஏபி ஷா, முன்னாள் தூதர் கேசி சிங், பிரபல பாடகர் ஜாவித் அக்தர், மூத்த வழக்கறிஞர் கேடிஎஸ் துல்சி, தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் குரேஷி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.