Sun. Nov 24th, 2024

ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்:

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி.

தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

கண்கண்ணாடி கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டுமணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், பல்ககலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நிர்வாக பணிகளுக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் அல்லது 10 நபர்கள் மட்டும் செயல்பட அனுமதி.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

ஏற்றுமதி நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் அனுமதி.

இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி.

செல்போன் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி.

வேளாண் உபகரணங்கள், பம்பு செட்டு பழுது நீக்கும் நிறுவனங்கள், மண்பாண்டகள் கைவினை பொருள் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் நடைபயிற்சிக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி.

சைக்கிள், பைக் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதி.

தொற்று பரவல் அதிகமுள்ள சேலம் நாமக்கல்,ஈரோடு, கரூர், கரூர்,திருப்பூர், கோவை, நீலகிரி ,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி.