Sat. Apr 19th, 2025

தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு இணையம் மூலம் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான பதிவு முறையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்பாட்டு மொழியாக இருந்து வந்தது. இந்நிலையில், தடுப்பூசி முன்பதிவுக்கான இணைய தள வசதியில், மேலும் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டுள்ளதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இணைய தள முன்பதிவில் தமிழ் மொழியையும் உடனடியாக சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் முழு விவரம் இதோ…