Mon. Nov 25th, 2024

தமிழகத்தில் மிகவும் பிரபலமான வண்டலூர் அறிஞர் அணணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனோ 2வது அலையை முன்னிட்டு பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு தடைவிதிக்கப்பட்டு, பூங்காவும் மூடப்பட்டுள்ளது.

விலங்குகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மட்டுமே அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பசியின்மை, உடல் தளர்வு உள்ளிட்ட காரணங்களால் சிங்கங்கள் அவதிப்பட்டு வந்ததை கண்டறிந்து, கால்நடை மருத்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கங்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 27 ஆம் தேதி முதல் 9 சிங்கங்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 9 வயதான நீலா என்ற சிங்கம், சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டதாக உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.