Mon. May 20th, 2024

சொல்வதை செய்வோம்..செய்வதை சொல்வோம்.. சொல்லாததையும் செய்கிறது திமுக அரசு….

கலைஞர் மு.கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு 6 அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

1.தென் சென்னையில் ரூ.250 கோடியில் 500 படுக்கைகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கிங் நிறுவன வளாகத்தில் தொடங்கப்படும்.

2.சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், மதுரையில் ரூ.70 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும்.

3.தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது ஆண்டுதோறும் மூன்று பேருக்கு வழங்கப்படும்.பரிசுத்தொகை ரூ.5 லட்சம்.

4.ஞானபீடம், சாகித்ய அகடாமி போன்ற தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச அளவிலான விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வீடு வழங்கும்.

5.திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள், உலர் களங்கள்.

6. திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை – தமிழ்நாடு அரசு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சொல்வதை மட்டுமே திட்டமாக வடிக்காமல், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாததையும் அறிவித்து சாதனைப் படைத்து வருவதாக பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

DIPR-P.R.No_.214-Honble-CM-Press-Release-Kalaignar-Birthday-Announcement-Date-03.06.2021-2