சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்
திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் மு.கருணாநிதி-ன் 98வது அகவையை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் அறநிலை துறைக்கு கீழ் மாத சம்பளம் இன்றி பணிபுரியும் 14,000க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரன நிதியாக 4,000 ரூபாய் ரொக்கம், 10 கிலோ அரிசி, 15வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்,கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு 10 லட்சமும், மருத்துவ பணியாளர், காவலர், நீதிபதிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கும் திட்டம்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 நபர்களுக்கு அரசு பயன்கள் வழங்கும் திட்டம்,கொரோனா நோய் தொற்று நிவாரணமாக இரண்டாம் தவனையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் கொரோனா பாதிப்பு நிவாரணமாக 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அதன் பின்பு சென்னை சூர்யா தனியார் மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன் மற்றும் சிம்சன் மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகரன் இருவரும் பணியின் போது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இருவரின் குடும்பத்திற்கும் நிவாரண நிதியாக தலா 25,00,000 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து பெற்று கொண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சருக்கு உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
இதேபோல், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பத்மாவதி வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்ததன் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், பணியின் போது தொற்று பாதித்து உயிரிழந்த திருக்கழுக்குன்றம் காவல்நிலைய தலைமை காவலரின் மனைவியிடம் 25 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் வழங்கினார்.
திருக்கோயில்களில் மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், மளிகை பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் வீட்டு மனை பட்டா கோரி மனு அளித்ததன் அடிப்படையில் வீட்டுமனை பட்டாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.