மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாள் விழா மிகுந்த எழுச்சியுடன் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் மீண்டும் அரியணையை அலங்கரிக்கும் வாய்ப்பை திமுக இழந்துவிட்டதால், முன்னணி தலைவர்கள் முதல் சாதாரண தொண்டர்கள் வரை ஒருவிதமான விரக்தியில் இருந்து வந்தனர்.
2021 ஆம் ஆண்டில் திமுக எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிடும் என்ற சூழல் உருவானபோது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு (2018) வயோதிகத்தின் ஏற்பட்ட உடல் நலக்குறைவால், கலைஞர் மு.கருணாநிதி மரணமடைந்தார். அவர் உயிரோடு இருக்கும் காலத்திலேயே அவரை மீண்டும் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து பார்த்துவிட வேண்டும் என்று அப்போதைய செயல்தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முழுமையாக களப்பணியாற்றினார்.
ஆனாலும், திமுக ஆட்சி அமைக்கும் காலம் உருவான நேரத்தில், கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இல்லை. அந்த ஏக்கத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளத்தில் புதைந்து கிடந்த உணர்ச்சிகளையெல்லாம் கோர்வையாக்கி ஆனந்த பூக்கள் மூலம் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி, தனது நன்றிக்கடனை தீர்த்துக் கொண்டுள்ளார்.