தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலான போதும் கொரோனோவின் தாக்கம் குறையவே இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் 35,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 5,559 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 448 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். குணமடைந்து 25,776 பேர் வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 86 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்து கோயம்புத்தூரில்தான் அதிக பாதிப்பு காணப்படுகிறது. அங்கு 3,165 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் 1,621 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 20 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில், கொரோனோவால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உள்பட மொத்தம் 2,84,278 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டம் வாரியாக கொரோனோ பாதிப்பு குறித்த விவரம் இதோ….
