Mon. Nov 25th, 2024

முதல்வர் ஸ்டாலின் – பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை ஏற்கிறார்.

துரை முருகன் – சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

கே.என். நேரு – நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்.

இ. பெரியசாமி – கூட்டுறவுத்துறை

பொன்முடி –  உயர்கல்வித் துறை, தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.

எ.வ. வேலு – பொதுப் பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் – வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.
 
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள்,  பேரிடர் மேலாண்மை.
 
தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்.

எஸ். இரகுபதி – சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்.

சு. முத்துசாமி – வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

கே.ஆர். பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்.

தா.மோ. அன்பரசன் – ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

மு.பெ. சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
 
பி.கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை.

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை.

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை.

கா.ராமச்சந்திரன் – வனத்துறை.

சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை.

வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை.

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.

பி.கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை.

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை.

சா.மு.நாசர் – பால்வளத்துறை.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை.

சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை.

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை.

த.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை.

மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை.

என்.கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை

2006ல் இருந்து 11 வரை அமைச்சராக இருந்த 14 பேர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

 • முதலமைச்சராக மு க ஸ்டாலின் – இசை வேளாளர்
 •  துரைமுருகன் – வன்னியர்
 •  பொன்முடி – உடையார்
 •  கே.என்.நேரு – ரெட்டியார்
 •  ஐ.பெரியசாமி – முக்குலத்தோர்
 •  ஏ.வா.வேலு – நாயுடு
 •  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வன்னியர்
 •  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – ரெட்டியார்

 •  தங்கம் தென்னரசு – முக்குலத்தோர்
 •  பெரிய கருப்பன் – யாதவர்
 •  தா.மோ. அன்பரசன் – முதலியார்
 •  வெள்ளக்கோவில் சாமிநாதன் – கொங்கு வேளாளர்
 •  கீதா ஜீவன் – கிறிஸ்துவநாடார்
 • தா.ராமச்சந்திரன் – படுகர்

புதிதாக முதல்முறை அமைச்சராக பொறுப்பு ஏற்பவர்கள்… 15 பேர்

1 சக்கரபாணி – கொங்கு வேளாளர்
2 காந்தி – நாயுடு
3 மா.சுப்பிரமணியன் -மீனவர்
4 மூர்த்தி – முக்குலத்தோர்
5 சிவசங்கர் – வன்னியர்
6 சேகர்பாபு – நாயுடு
7 பழனிவேல் தியாகராஜன் – பிள்ளை
8 நாசர் – முஸ்லீம்
9 செஞ்சி மஸ்தான் – முஸ்லீம்

10 அன்பில் மகேஷ் – முக்குலத்தோர்
11 மெய்யநாதன் – முத்தரையர்

12 கனேஷன் – ஆதிதிராவிடர் BR
13 மனோ தங்கராஜ் நாடார் கிறிஸ்துவர்
14 மதிவேந்தன் – ஆதிதிராவிடர் -அருந்ததியர்
15 கயல்விழி ஆதிதிராவிடர் அருந்ததியர்