உலகிலேயே மிகவும் பணக்கார நாடாக வர்ணிக்கப்படும் அமெரிக்காவில், கொரோனோ தொற்று ஆடி வரும் ஆட்டத்திற்கு எல்லையே இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது. கொரோனோ தொற்று அச்சம் இருந்த போதும், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய அன்றாடப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பொழுதுபோக்கு அம்சம், வெளியூர் பயணங்கள் என அவர்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த முடக்கமும் இல்லை. இருப்பினும், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உரிய சிகிச்சை இன்றியும், மருத்துவச் சிகிச்சை பலனிக்காமல் போகும் போதும் மரணத்தை தழுவுகிறார்கள். அப்படி மரணத்தை தழுபவர்களின் பின்னணியில் உள்ள கதைகள், ரத்தக் கண்ணீரை வடிக்கும் விதமாகதான் பல தருணங்களில் உள்ளது அந்த வகையில், 16 மணிநேரத்திற்கு முன்பாக Bhuvi Multimedia என்ற யூ டிபூப்.பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, அமெரிக்காவிலும் பணத்திற்கு ஆளாக பறக்கிற ஆட்கள் இருக்கிறார்கள்.
காற்றில் பறந்து, தரையில் விழும் ஒவ்வொரு டாலரிலும் ஒரு மனிதனின் ரத்தமும், வியர்வையும் கலந்து இருக்கிறது என்ற கூச்சம் எதுவும் இன்றி போட்டி போட்டுக் கொண்டு தரையில் விழும் பணத்தை எடுக்கும் மக்களைப் பார்த்தால், மரணத்தை தழுவும் நிமிடம் வரை பணத்தின் மீதான ஆசை யாருக்கும் போகாது என்பதை வெளிப்படுத்துகிறது.
காற்றில் பறக்கும் டாலரின் கதை சோகமயமானது…. அமெரிக்காவின் சுற்றுலா நகரங்களில் முதல் இடத்தில் உள்ள நியூயார்க்கைச் சேர்ந்த ஒருவர், கொரோனோ தொற்றுக்கு பலியாகி விடுகிறார். மரணத்தை தழுவும் தருவாயில், தனது நண்பரை அழைத்து தான் சேர்த்து வைத்துள்ள பணத்தையும், சொத்தையும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதியில் வீசி எறிய சொல்லிவிட்டு, உயிரை துறக்கிறார்.
நன்றியுள்ள நண்பன் போல.. அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில், டாலர்களை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நியூ யார்க் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவின் நடைப்பாதையில் நின்றுக் கொண்டு டாலர்களை மேல்நோக்கி வீசுகிறார். அந்த பணம் பறந்து சென்று கீழே விழுகிறது. அதை போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்க மக்கள் பொறுக்குகிறார்கள்.
அந்த டாலர்களின் மதிப்பை விட, இறந்து போன அந்த மனிதன் உதிர்த்த வார்த்தைகளுக்குதான் அதிக மதிப்பு இருக்கிறது. உங்கள் உடல்நலத்தை விட உயர்ந்த சொத்து என்ற ஒன்று உலகிலேயே இல்லை என்பதுதான் அந்த பொன் எழுத்துகள்.. பணத்தை அள்ளும் மக்கள், அந்த டாலரோடு, அவரின் பொன் மொழியை நினைவில் வைத்துக் கொண்டால், இறந்தபோன அந்த மனிதனின் ஆத்மா மகிழ்ச்சியடையும்…
a man died in New York City, due to corona. He made a will to his friend that all his money to be tossed in middle of street as let people learn that all the money/wealth of the world has no value in comparison to your health .