Fri. Nov 22nd, 2024

கொரோனோ தொற்று பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது;

நாட்டில் மீண்டும் சவாலான சூழ்நிலை உருவாகி உள்ளது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாததால்தான் இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்த வேண்டும்-

மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது.

கொரோனா சூழலை சமாளிக்க பரிந்துரைகளை வழங்க வேண்டும்.நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை கொரோனோ தடுப்பூசி பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும். தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.
 கொரோனா தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிப்பு விவரம்….

தமிழகத்தில் இன்று 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு.

இன்று 19 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,15,386 ஆக உயர்வு.

சென்னையில் மேலும் 1,520 பேருக்கு கொரோனா பாதிப்பு

நார்த்தாமலை தேர் திருவிழா ரத்து

இதனிடையே, கொரோனா தடுப்பு கட்டுப்பாடு அறிவிப்பால் வருகிற 12ம் தேதி நடைபெற இருந்த புதுக்கோட்டை நார்த்தாமலை கோயில் தேரோட்ட திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஏப்.12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஏப்ரல் 10 முதல் 20ஆம் தேதி வரை இரவு நேர
ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடகா முதலமைச்சர்
எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, மைசூரு, கல்பர்கி, தும்கூர், உடுப்பி, பிடார், மணிபால் மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.