குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது திமுக-காங்கிரஸ் கூட்டணி என விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமர்சித்துள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது.அதிமுக – பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த கூட்டணி உழைக்கும்.
ராகுலை பிரதமர் ஆக்குவது குறித்தே சோனியா சிந்தித்துக் கொண்டிருக்கிறார். உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றார்.
2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள். ஜி என்றால் கருணாநிதியின் குடும்பத்தின் 3 தலைமுறைகள். 4 ஜி என்றால் சோனியா குடும்பத்தின் 4 தலைமுறைகள்.
தி-மு.க. காங்கிரஸ் கூட்டணி, ஊழலுக்கான கூட்டணி என்பதை மறந்து விடாதீர்.
G 3G 4G என கொள்ளையடிக்கும் திமுக காங்கிரஸ் கொள்ளை கூட்டணி! அலைக்கற்றையை மட்டும் சொல்லவில்லை, இங்கே “G’ என்பது ஒரு தலைமுறையை குறிக்கிறது! நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது இந்த கொள்ளைக்கார கூட்டம்!
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமியும் துணை முத்ல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தந்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனோ தொற்று காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு திறமையாக செயல்பட்டது.அதனால், மத்திய அரசின் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளதை மறந்துவிடாதீர்கள்.
2022ஆம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத இந்தியாவைப் படைக்க வேண்டும் என தெரிவித்த அவர், கடந்த 70 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு இல்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு அதனைச் செய்துள்ளது
.
காங்கிரஸ் ஜல்லிக்கட்டை நிறுத்துவதாக தனது 2016 தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். ஜல்லிக்கட்டு தொடர வழிவகுத்தது மோடி அரசு தான்!
தேசிய ஜனநாயக கூட்டணியை முழுமையான பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.
விழுப்புரம் பொதுக்கூட்டம் முடித்துக்கொண்டு, சாலை மார்க்கமாக சென்னை வந்த உள்துறை அமைசசர் அமித்ஷா சாலையோரம் இருந்த எளிமையான உணவகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இரவு சிற்றுண்டி உட்கொண்டார்