கன்னியாகுமரி சுசீந்திரத்தில் ‘வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற பாஜக பிரசாரத்தை தொடங்கி வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து அமித்ஷா., பொதுமக்களிடம் ராதாகிருஷ்ணனை அறிமுகவைத்து, தாமரை சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர், குமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,,,,
.வரும் தேர்தல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டும்.
பாஜக – அதிமுக – பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
தொடர்ந்து, நாகர்கோவிலில் “வெற்றிக்கொடி ஏந்தி; வெல்வோம் தமிழகம்” பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
முன்னதாக, சுசீந்திரத்தில் தாணுமாலய கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்தார். ஒருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார், அமித்ஷா…