Sat. Apr 19th, 2025

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க, நெருங்க, உள்ளூர் அரசியல் வாதிகளிடம் அனலாக கொதிக்கும் தேர்தல் ஜுரம் பிரதமர் மோடியையும் விட்டு வைக்கவில்லைபோல.. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பேசுகிற இடங்களில் எல்லாம், போகிற ஊர்களில் எல்லாம், தமிழை தூக்கிப் பிடித்து கொண்டாடுகிறார். பாரதியர் கவிதைகள், திருக்குறள், அவ்வையார், புறநானூறு, அகநானூறு என தமிழ் இலக்கியங்களில் இருந்து அற்புதமான வரிகளை எடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களைவிட, அதிகளவு கொண்டாடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

அதன்படி,ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று அவர் பேசும் மாக் கி பாத் என்ற மனிதன் குரல் வானொலி உரை இன்று ஒளிப்பரப்பானது. அதில், வழக்கம் போல தமிழை கொண்டாடிய அவர், தமிழை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று மனதின் ஆழத்தில் இருந்து பேசியிருக்கிறார்.

அவரின் உரைச் சுருக்கம் இதோ….

இந்த உலகத்திலேயே மிக அழகான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. தமிழ் மொழி கற்க வேண்டும் என எனக்கு ஆசை உள்ளது. தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது; அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் மிகவும் சிறப்பானவை.

தமிழ் கற்க ஆசை!

சுயசார்பு இந்தியா திட்டம் என்பது வெறும் அரசின் கொள்கை மட்டுமல்ல. அது ஒரு தேசிய உணர்வு என்று தனது உரையில் முத்துகள் போன்ற கருத்துகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.