Fri. Nov 22nd, 2024

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அடிக்கடி உயர்த்தப்படுவதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மேலும் 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்டதால், உயர்த்தப்பட்டதால் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ள நிலையில், இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 200 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இன்றுகூட உயர்வும் கடந்த 3 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள் சாமானிய மக்களை உயர்ந்த பணவீக்கத்தில் தள்ளுகிறது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி, கடந்த 12 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின.

இதனால், மத்தியப் பிரேதசம், ராஜஸ்தானில் பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100க்கு மேல் அதிகரித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.88க்கு மேல் சென்றது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக இன்று சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.