Mon. Jun 9th, 2025

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை சென்னை வருகிறார். காலையில் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் அவர், சென்னை வழியாக மாலை கோவை செல்கிறார். அங்கு நடைபெறும் தமிழக அரசின் விழா மற்றும் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே பதிவிட்டுள்ளார். தேச வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அதன் விவரம் இதோ….