திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் மாசி பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று (பிப். 21) உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கொரோனோ தொற்று அச்சுறுத்தலால் கடந்தாண்டு தடைபட்டிருந்த பிரம்மோற்சவ விழா, ஓராண்டுக்குப் பிறகு இன்று தொடங்கியதையடுத்து, மகிழ்ச்சியடைந்த பக்தர்கள், வீதிதோறும நின்று உற்சவருக்கு பக்தி பரவசம் பொங்க வரவேற்றனர். பூமாலை சாத்தியும், பழம், தேங்காய் படையல் வைத்தும் உற்சவரை மனமுருக வழிபட்டனர். திரும்பிய திசையெங்கும் திருத்தனியில் முருகா, முருகா என்ற பக்தி முழக்கம் எதிரொலித்தது.