சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில், இது ரூ.1.25 லட்சம் கோடியாக உயரும். இந்தியாவில் 81% லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்குகிறோம். லித்தியம் அயனுக்கு மாற்றாக எனது அமைச்சகம் முன்முயற்சி எடுத்து வருகிறது.
அரசு ஆய்வகங்கள் தொடர்பான அனைத்தும் ஆராய்ச்சி நடந்து வருகின்றன. ஹைட்ரஜன் எரிபொருள் கலங்களை உருவாக்க அமைச்சகம் முயற்சிக்கிறது.
மாற்று எரிபொருளுக்காக நாடு செல்ல வேண்டிய நேரம் இது என்பது எனது பரிந்துரை. இந்தியாவில் உபரி மின்சாரம் இருப்பதால் நான் ஏற்கனவே மின்சாரத்தை எரிபொருளாக்க பிரச்சாரம் செய்கிறேன்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
மேலும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கழிவுநீரை கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என்றும் நிதின் கட்காரி கூறினார்.