இந்திய பாதுகாப்பு படை பணியாளர்களின் தளபதி பிபின் ராவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ராஜாங்க பிரதிநிதிகளும் ராணுவ தளபதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
பாகிஸ்தானின் ராணுவ தளபதியும் தன் இரங்கலை தெரிவித்திருந்தார்
நேற்று இரவு டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ அலுவலர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தி 13 பேரின் குடும்பத்தாரையும் சந்தித்து இரங்கலை தெரிவித்தார்
இன்று ராவத்தின் உடல் தகணம் செய்யபடுகின்றது
எதிரி நாடுகளுக்கு நெருப்பாய் இருந்த ராவத் நெருப்பில் இடபடுகின்றது என்பது மனதை ரணப்படுத்துகிறது என்றாலும் இந்த நெருப்பில் இருந்து பல்லாயிரம் ராவத்துக்கள் உருவாகி தேசம் காப்பார்கள் என்ற ஆறுதல் மிஞ்சுகின்றது
லடாக் எல்லையினை பலமாக்கி அதன் உட்கட்டமைப்புகளை வலுவாக்கிய முதல் ராணுவதளபதி எனும் வகையில் வரலாற்றில் அவர் என்றும் நிலைத்திருப்பார்
அந்த பெருமகனுக்கு இன்று எல்லா வீட்டு வாசல்களிலும் கோவில்களிலும் தீபமேற்றி அஞ்சலி செலுத்தவேண்டியது இந்தியரின் கடமை, தேசத்தை மிக நேசித்த அந்த ஆத்மாவுக்கு அதைவிட வேறு சாந்தி என்ன இருக்க போகின்றது?