Sun. Nov 24th, 2024

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் மகன் கருணா சாகர்(24) .இவர் பெங்களூரில் தங்கியுள்ளார்..நேற்று இவருடன் ஆடி காரில் மேலும் 6 பேர் நள்ளிரவில் உணவருந்தி விட்டு வீடு திரும்பிய உள்ளனர்.. இதில் 3 பேர் இளம்பெண்கள்..

கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் ஆடி கார் சென்றபோது சாலையில் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரமான சாலை விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.. விபத்தை கேள்விப்பட்டு திமுக எம்எல்ஏ பிரகாஷ் பெங்களூர் விரைந்தார்.. கருணா சகர் மரணத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்..