Fri. Mar 29th, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் விபத்தில் சிக்கியதில் திமுக மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ், படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானர். உடன் பயணம் செய்தவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் இவர் பணி நிமித்தமாக தனது நண்பருடன் சொகுசு காரில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று அதிகாலை அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் உருகுலைந்த நிலையில், காரில் இருந்த ராகேஷும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர்.

என்ஆர்இ. ராகேஷ்

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நவீன இயந்திரமான ஜேசிபி உதவியுடன் இருவரும் மீட்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ராகேஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரது நண்பர், மோதி கார் உருகுளைந்தது இதில் பயணம் செய்த திமுக எம்.பி.என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் சம்பவ அவசர சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கி உருக்குலைந்த காரில் இருந்து இருவரையும் மீட்பதற்கு தீயணைப்பு துறை அலுவலர்கள் கடுமையாக போராடினர். ஒரு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் ரத்தம் ஆறு போல ஓடியதை கண்டு, அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

விபத்து குறிதது கோட்டக்குப்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகேஷ் மரணம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடம் திமுக எம்பி என்ஆர் இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர்கள் நண்பர்கள் உள்பட ஏராளமானர் கோட்டகுப்பம் விரைந்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் – முதலமைச்சர் அவர்களின் இரங்கல் செய்தி !

திமுகவின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு – மிகுந்த வேதனைக்கும் – சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது.

அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும்- அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.