Sun. Nov 24th, 2024

காந்தி, நேதாஜி, உள்ளிட்ட தலைவர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம்; நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரின் அரும்பணிகளையும் நினைவுகூர்வோம்.

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட நமது விளையாட்டு வீரர்களை பாராட்டுவோம்; சிறப்பாக விளையாடிய அவர்கள், தேசத்தின் பெருமையை ஒலிம்பிக்கில் நிலைநாட்டினர்.

ரயில்வே, நீர்வழி போக்குவரத்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன; சிறு நகரங்களை இணைக்கும் வகையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையங்கள் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.

விவசாயத்தில் புதுமையை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; அடுத்த தலைமுறையினருக்கு கட்டமைப்புகளை ஏற்படுத்த உழைத்து கொண்டிருக்கிறோம்.

விவசாயிகள் நலனுக்காக விளை பொருட்களை சேமித்து வைக்க ஏதுவாக கிராமங்கள் தோறும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

நமது கிராமத்து விவசாயிகளின் விளை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது; விவசாயிகள் நலனுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நாம் வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் உள்ளது, புதிய இந்தியாவை சிறப்பாக கட்டமைக்க கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது; கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை.

நாம் கைபேசிகளை இறக்குமதி செய்த நிலை போய், தற்போது 3 பில்லியன் கைபேசிகளை ஏற்றுமதி செய்கிறோம்; நமது பொருட்கள் உலகத்தரம் வாய்ந்ததாகவும், உலக தரத்துக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பின் பிரதமர் மோடி உரை ஆற்றினார்..