Sat. Nov 23rd, 2024

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நினைவுக் கோயில் எழுப்பியுள்ளார். இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசசினார், அப்போது அவர், அதிமுகவின் இரு பெரும் தெய்வங்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.இந்த இரண்டு தலைவர்களும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளனர். மேலும், மக்களுக்காக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர்  பாடுபட்டனர். இவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், . சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முக்கியமாக, ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறினார்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனங்களில் தெய்வமாக வாழ்த்து வருகிறார்கள். ஒருமித்த கருத்தோடு நாம் பணியாற்றி சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற வேண்டும்.மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா பொற்கால ஆட்சி மீண்டும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்து பேசினார் முதல்வர் இ.பி.எஸ்.