மஹாராஷ்டிரா சட்டசபையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக கூறி 12 பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்து அம்மாநில சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிர சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் எனக் கோரி பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவின் அறைக்கு சென்ற பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் அவரைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கடும் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 உறுப்பினர்களை ஓராண்டிற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அறிவித்துள்ளார்.