கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதுதான் காவல்துறையினரின் முதல் பணியாக இருக்கும் என்று பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
பெருநகர சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் இன்று காலை சேத்துப்பட்டில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் காவல் ஆணையர் பணியில் இருந்து விலகிச் செல்லும் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீதும் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஊரடங்கு விதிகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முழு ஊரடங்கை வெற்றிகரமாக அமல்படுத்த காவல்துறையினர் முன் வர வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டார்.
கொரோனோ சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும், நோய் தொற்று காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பதுடன் இருக்கவும் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்றும் பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.