Tue. May 14th, 2024

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் கட்டமாக எண்ணப்பட்ட அஞ்சல் வாக்கு மற்றும் முதல் சுற்று வாக்குகளின் முடிவிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மையானோர் அஞ்சல் வாக்குகளில் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து வாக்கு எந்திரங்களின் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றின் முடிவில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக 55 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

திமுக 72 தொகுதிகளிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் 1391 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 1345 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் உள்ளார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

வேதாரண்யத்தில் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 3,615 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், திமுக வேட்பாளர் வேதரத்தினம் 3818 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும் உள்ளார்.

ஜோலார்பேட்டையில் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி 4402 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

விருதாசலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளார்.