Mon. May 13th, 2024

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி பதிவான வாக்குகள் 26 நாட்களுக்குப் பிறகு இன்று எண்ணப்படுகறது. . மாநிலம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.. கொரோனோ தொற்று பரவலையடுத்து மிகுந்த முன்னெச்சரிக்கை அடிப்படையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதால் அரசியல் கட்சி முகவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க வாக்கு எண்ணும் மையத்தில் குறைவான அரசு பணியாளர்களை கொண்டே வாக்கு எண்ணப்படுவதால் முடிவுகள் வெளியாவதற்கு காலதாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்..

எனினும் நண்பகல் 1 மணியளவில் தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டிற்கான தலையெழுத்தை எழுத போகிறது திமுக. வா. அதிமுக. வா என்பது உறுதியாகும் என்றாலும் முதல் சுற்று முடிவிலேயே திமுக 108 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 15 இடங்களிலும் காலை 10 மணி நிலவரப்படி பெற்றுவிட்டன. இதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்களுக்கு மேலாக திமுக கூட்டணி பெற்று முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் திமுக அரியணையை அலங்கரிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

ஆளும்கட்சியான அதிமுக 88 இடங்களில் பெற்று, பின்தங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..

இதேபோல் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை யும் இன்று நடைபெறுகிறது..

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஞாயிற்றுக்கிழமை க்கான முழு ஊரடங்கு உத்தரவு இன்றைக்கும் பொருந்தும் என்பதால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை இன்றைக்கும் தொடர்கிறது.. இதனால் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக பட்டாசு வெடிப்பது, வீதியில் திரண்டு வெற்றி முழக்கமிடுவது உள்ள கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு எல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது…

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை யும் இன்று நடைபெறுகிறது…