Sat. Nov 23rd, 2024

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி உயிரிழந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், அவரது குழந்தைகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரனிப் நகரில் வசித்து வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்றால் பாதிதக்கப்பட்ட அவர், அதே பகுதியில் உள்ள அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 80. . அவருக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவச் சிகிச்சைக் குறித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நர்மதா பென்னின் கணவர் ஜகிவன்தாஸ், பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸின் சகோதரர் ஆவார். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டதாக மோடியின் சகோதரர் கூறினார்.