சென்னையில் பணியாற்றி வரும் காவல்துறையைச் சேர்ந்த பலர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மூன்று அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து, கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு உயரிய சிகிச்சை உடனுக்குடன் கிடைக்கும் வகையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையுடன் இணைந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக ஹைடெக் ஏ பிளாக் விடுதி வளாகத்தில் காவல்துறையினருக்கான தனிச் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் இன்று ( 27. 4 .2021) நடைபெற்ற எளிய நிகழ்வில், சிகிச்சை அளிக்கும் மையம் covid-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, நோய் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 39 காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் நலம் விசாரித்தார். காவல் துறையினருக்கு தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையை அளித்து வரும் மருத்துவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோருக்கு மனமார்ந்த நன்றியை சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக ஆணையர் பகிர்ந்து கொண்டார்.
இந்த காவலர் சிகிச்சை மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்பு உடன் ஆம்புலன்ஸ் வசதி. இலவச தரமான உணவு மருந்துகள் வழங்கப்படுகிறது.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது சிறப்பம்சமாகும்.