Sun. Apr 20th, 2025

பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.சின்னத்தம்பி விடுத்துள்ள அறிக்கை விவரம் இதோ… ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண் 7200920000 (இராமேஸ்வரம்.)

உயர்நீதிமன்றம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்களின் ஆலோசனை.

வட இந்திய மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. ஒரு சிலிண்டர் விலை ₹20,000 வரை விற்க்கப்படுகிறது. இதனால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிசன் கிடைக்காமல் இந்திய மக்கள் இறக்கிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை வழக்கறிஞரை கொரோனா ஆலோசகராக நியமித்து வழக்கு நடத்தி ஆலோசனை வழங்குவதை பாராட்டுகிறோம்.

அதேவேளை உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்..

1, இந்தியாவில் வேதாந்த நிறுவனம் 18 மேற்ப்பட்ட தொழிற்ச்சாலைகளை நிறுவியுள்ளது. அவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் வட இந்திய பகுதிகளில் உள்ளது. குறிப்பாக

1.vedanta aluminium company –
korba , chattishkar

  1. Lanjigare Alumina refinery –
    bhadaguda, Odisha
  2. Hindustan zinc factory –
    Udaipur Rajasthan
  3. Cairn india oil and gas –
    Gurgaon , Haryana
  4. ESL steels – Bokaro, jhargant
  5. Sesa Goa iron ore –
    chitradurga , karnataka
  6. வட இந்திய பகுதிகளில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான அலுமினியம், இரும்பு போன்ற உலோக தொழிற்சாலையில் ஆக்சிசன் உற்பத்தி தொடர்ந்து நடந்துவருகிறது.
  7. எனவே நாட்டின் நலன்கருதி மருத்துவ ஆக்சிசன் உற்பத்தியை பெருக்கி தருவதாக தாமாக முன்வந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் வட இந்திய பகுதிகளில் உள்ள உலோக தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிசன் உற்பத்தியை ஊக்கப்படுத்தி நாட்டிற்க்கு தேவையான ஆக்சிசனை பெற ஆவன செய்யவேண்டுகிறோம்.
  8. தமிழகத்தில் மருத்துவ ஆக்சிசன் தேவை தன்னிறைவாக உள்ளது. வட இந்திய மாநிலங்களுக்கே ஆக்சிசன் அதிகம் தேவைப்படுகிறது. எனவே 3 ஆண்டுகளாக செயல்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிசன் உற்ப்பத்தி செய்து வட இந்திய பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் நேரமும், பயண விரையமும், பெரும் பொருட்செலவும் ஆகும்.
  9. எனவே வட இந்திய பகுதியில் வெதாந்த குழுமத்தில் உள்ள பயன்பாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிசன் உற்ப்பத்தி செய்வதே சிறந்தது.
  10. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசால் நச்சு ஆலை என தடை செய்யப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்ச்சிப்பது மக்கள் விரேத செயல்.
  11. எனவே இந்த முயற்சியை கைவிடவேண்டும்

இவ்வாறு பாரம்பரிய மீனவர்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.