கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனோ தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட வேண்டும் என்று கரூரைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இருதரப்பு விசாரணைக்குப் பிறகு அமர்வு, தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தது.
கொரோனாச இரண்டாம் அலை தீவிரம் அடைய தேர்தல் ஒரு காரணம்.
தேர்தல் பாப்புரை நடந்த போது தேர்தல் அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா…?
கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புக்கு தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!”
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்
அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பரப்புரை செய்ததே தொற்று பரவலுக்கான காரணம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்க காதில் வாங்கவில்லை
உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.