Sun. Apr 20th, 2025

கடந்தாண்டு கொரோனோ தொற்று பரவியத் தொடங்கிய நேரத்தில், கொரோனோவுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்த பொதுமக்களிடம் இருந்து பிரதமர் மோடி நிதி திரட்டினார். பிரதமர் கேர்ஸ் எனும் பெயரில் பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரணம், (PM CARES ) என்ற பெயரில் திரப்பட்ட நிதியில் இருந்து நாடு முழுவதும் 551 இடங்களில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் தொடங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு இந்த திட்டம் பெருமளவில் ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படவுள்து.

பிஎம் கேர்ஸ் நிதி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் பொது சுகாதார வசதிகளுக்காக கூடுதலாக 162 சிறப்பு பி.எஸ்.ஏ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு 201 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதம் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதற்கும், அதற்காக பிரதமர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். மிகப்பெரிய முடிவு இது என்றும் இதன் மூலம் ஆக்சிஜனுக்கு எதிரான சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிபிட்டுள்ளார்.