சென்னை
ஏப்ரல் 25
தகவல் : எம் வ. ராஜதுரை
நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென்மாவட்ட ரெயில்களில் இன்று காலை சென்னை,ஏழும்பூர் வந்து இறங்கிய நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் தங்கள் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.
வயதானவர்களுடன் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.
ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தனர்.
ரயில் டிக்கெட்டை காண்பித்து உங்கள் வீடுகளில் இறக்கி விட்டு விடுவோம்.
திரும்பி வரும்போது எங்களை மடக்கி கடுமையான தண்டனை விதித்து விடுவார்கள் என்று அவர்கள் வாகனங்களை இயக்க மறுத்து விட்டனர்.
இதே நிலை தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களிலும் இன்று காலை நிலவியது.
மாநில அரசும் ரயில்வேயும் அவதிப்படும் பயணிகளுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற அவசர முடிவுகளை எடுத்து நிறைவேற்றும் போது மத்திய மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.