Sun. Apr 20th, 2025

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு உத்தரவு மூலம் சிகை அலங்கார கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடம் என்று அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிததுள்ளனர். மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அறிவித்திருப்பதற்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு அறிவித்த ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்தே இன்னும் மீள முடியாத நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கால் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதே கடும் சிரமமாக இருக்கும் என்று கண்ணீர் மல்க தொழிலாளர்கள் கதறுகின்றனர்.