சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் டி.கருணாநிதி (வயது48) இவர், குடும்பத்துடன், ராஜாஅண்ணா மலைபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். தலைமைக் காவலர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல், கடந்த 13 ஆம் தேதி அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்ததின் பேரில், பின்னர் மேல் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை பெற்றார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி தலைமைக் காவலர் கருணாநிதி இன்று (23.4.2021) அதிகாலை சுமார் 05.00 மணியளவில் இறந்தார். இவருக்கு சுந்தரவள்ளி என்ற மனைவியும், சாய்கிஷோர், என்ற மகனும் உள்ளனர்.
அவரது உடல் அடக்கத்திற்குப் பிறகு மாலையில் கோட்டூர்புரம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இறந்த தலைமைக் காவலருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., மறைந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர கூடுதல் காவலர்கள் இணை ஆணையர்கள் துணை ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள், தலைமைக் காவலரின் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.