Sun. Apr 20th, 2025

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நடைபெற்ற கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட கொரோனோ தொற்று எதிர்ப்பு மருந்துகளை வழங்கினார். அப்போது அவர், கொரோனோ தொற்று பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.