Sun. May 4th, 2025

தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வரின் கடித விவரம் இதோ….

தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, தமிழகத்திற்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்.

ஒரு சில மாநிலங்கள் ரெம்டெசிவிர் மருந்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தடுக்கும் நடவடிக்கையை தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.