Sat. Nov 23rd, 2024

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் மாகாணத்தில் நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) மர்ம மனிதர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் அப்பாவி மக்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம மனிதரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது மர்ம மனிதர் தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியாக, அங்குள்ள ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது அங்கு பணியில் இருந்த இரண்டு ஊழியர்கள், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் நிகழ்வுப் பற்றி கூறும் போது, தொடக்கத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது, கார் நிறுத்தம் இடத்தில் இருந்து கேட்பதாக கருதினோம். நாங்கள் உஷாராவதற்குள் இரண்டு மர்ம மனிதர், எங்கள் அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டார். அவர் கையில் தானியங்கி துப்பாக்கி இருந்தது. பத்து முறை துப்பாக்கியால் சுட்டிருப்பார். அப்போது ஒன்றிரண்டு பேர் தரையில் விழுந்து கிடந்தார்கள் என்று அவர் கூறினார்.

FedEx நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் Jim Masilak தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பணியாளர்களின் பாதுகாப்பைதான் முதன்மையாக கொண்டுள்ளோம். நாங்கள் எல்லோருமே இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக விசாரித்து வரும் துறை அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து வருவதுடன் எங்களுக்கு கிடைத்த தகவல்களையம் தெரிவித்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நான்கு, ஐந்து பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.