பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வங்க தேசத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்தநாட்டின் 50 வது சுதந்திர தின நாள் விழா கொண்டாட்டத்தில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்களில் ஒருபிரிவினர் காவல்நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்து பொருட்களை சூறையாடியதாகவும், அவர்களை கலைக்க, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கலைத்தாகவும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. போராட்ட நிகழ்வு குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த 2 ஊடகவியலாளர்களும் காயமடைந்திருப்பதாக வங்கசேத செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.