ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை
அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.
அரசு உத்தரவு உறுதி செய்கிறது
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10.5% உள் ஒதுக்கீடு மூலம் அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி, வேலைவாய்ப்புகள் பெறுவதை அரசின் உத்தரவு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனோ
உச்சநீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்.
உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நேரிடையாக முறையிடும் முறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.
காணொலி வாயிலாக முறையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
உச்சநீதிமன்ற பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சுஷில் சந்திரா நியமனம்
தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவி ஓய்வு பெற்றதை அடுத்து சுஷில் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய கொரோனோ பாதிப்பு நிலவரம்
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 904 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதித்த 92 ஆயிரத்து 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக நிலவரம்
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 6,711பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,145 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று மட்டும் 2,105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பங்கு சந்தை வீழ்ச்சி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,188 புள்ளிகள் சரிந்து 48.402 புள்ளிகளில் வர்த்தகம்.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14 ஆயிரத்து 481 புள்ளிகளில் வணிகமாகிறது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி
தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட கலைஞர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அரசின் அறிவிப்பு மூலம் 6,810 கலைஞர்கள் பயன் பெறுவார்கள்.
வானிலை நிலவரம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
துரைமுருகன் நலமே….
திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை சீராக உள்ளது என சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக, துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
தடுப்பூசியை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், தேவையானமருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்துங்கள் என முதல்வர் கேட்டுக் கொண்டார். பொதுமுக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை போலீஸ் மாற்றம்
உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர்-சிசிடிவி காட்சிகள் வைரல் ஆனதையடுத்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை உணவகத்தில் மக்களை தாக்கிய எஸ்.ஐ முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். .
பாதிக்கப்பட்டவர்கள் புகாரை தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
[
ரஷ்ய தடுப்பூசிக்கு அனுமதி
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு
பரிந்துரை செய்துள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்தால், நாட்டின் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் இருக்கும்.
ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது.
ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.
கோரிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைபடியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம்.
மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இன்றைய விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.58 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.88 க்கும் விற்பனை.