Fri. Nov 22nd, 2024
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் மற்றும் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர், கொரோனோ தொற்றின் தாக்கம், கையிருப்பு உள்ள தடுப்பூசிகளின் விவரம், நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் பிராண வாயு வசதி உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுடன், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்து சிகிச்வை வழங்குவதற்கான மையம் அமைத்தல் மற்றும் தேவைக்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை தயாராக வைத்திருப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். 
மேலும், கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மறுஆய்வு செய்யுமாறும், நோய் தொற்று மேலும் பரவாமல் கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
இந்தக் கூட்டத்தில் பஞ்சாப்,சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநில காங்கிரஸ் முதல்வர்களும், மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.