Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 10,813 பதற்றமானவை என்றும் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ரூ.428.46 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் வாக்குப்பதிவு மையங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் கூறினார்.

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என்றும் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாக கன்டறியப்பட்டுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.