Sun. Apr 20th, 2025

தனது மருகன் சபரீசன் இல்லம், அண்ணா நகர் தொகுதி, கரூர் தொகுதி மற்றும் திருவண்ணாமலை திமுக எம்.பி. அண்ணாதுரை உள்ளிட்டோர் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் தோல்வி பயத்தால் மத்திய அரசு தூண்டுதலின் பேரில் திமுக பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், திமுக தலைவரும், மத்திய பாஜக அரசு கடும் கோபத்தில் இருப்பதாக இரண்டாம் கட்ட தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நேரத்தில் சுடுச் சொற்களை கொண்டு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இதோ…

நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்! திசை திருப்பல்களால் கவனம் சிதறிவிட வேண்டாம். களத்தில் வெல்வோம்! தமிழகத்தை மீட்போம்!