Sat. May 18th, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பறந்து, பறந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்றிரவு மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, வால்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின்.

ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று மேட்டுப்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், உதகை, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

மாலையில் அவர் போடடியிடும் கொளத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அவர் தொடர்ந்து, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி பரப்புரை மேற்கொள்கிறார்.